வெள்ளி, 19 ஜூலை, 2013

*டைலன் டாக்* ஜானி எனும் காது கேட்காத வாய் பேச முடியாத இரண்டு வயது சிறுவன் காணாமல் போகிறான். பல ஆண்டுகள் கழித்து அவன் வெளிப்பட்ட போது அவனுடைய கால்கள் இரண்டும் கிட்னி ஒன்றும் நுரையீரல் ஒன்றும் நீக்கப்பட்டிருந்தன. அவனுக்கு இந்த கொடுமைகளை இழைத்தது யார்? எனும் கேள்வியுடன் துவங்கும் இந்தக் கதை தொடரும் பக்கங்களில் மெல்லிய உணர்வுகளின் பிரவாகமாய் நகருகிறது. ஜானியின் புலன்கள் மெல்ல மெல்ல விழித்துக் கொள்ளும் இடங்களில் நம்முள்ளும் ஒரு பரவசம் மலர்கிறது! ஜானியை சூழ்ந்துள்ள மர்மங்கள் விலகும் போது இப்படியும் நடக்குமா? எனும் திகைப்பு ஏற்படுகிறது. கதையின் முடிவு தமிழ் சினிமா முடிவைப் போல் இருக்கிறது. கதை முடிந்த பின்னும் ஒரு கேள்வி எழகிறது. தனக்கு தீங்கிழைத்தது யார் எனும் உண்மை தெரிந்திருந்தும் ஜானி மவுனம் சாதிப்பது ஏன்? பயமா? பாசமா? ஜானியின் இறுதி ஆசை அது "பாசம்" என்பதாகவே என்னை உணரச் செய்கிறது. இயல்பான வசன நடை கொண்ட இக்கதை நான் படித்தவற்றில் மிகச்சிறந்தது என்பேன்! இக்கதையை படித்த பின் உங்களுக்குள்ளும் ஒரு குரல் ஒலிக்கக் கூடும் ஜானி... ஜானி... ஜானி... https://m.facebook.com/photo.php?fbid=145036109029824&id=100005703062523&set=gm.205985269557121&refid=18

ஞாயிறு, 14 ஜூலை, 2013

All New Special... கொலை செய்வீர் கனவான்களே ! மிக மிக வித்யாசமான கதைக்களம்! புதியஅனுபவம்! வசனங்களில் வரும் சில வார்த்தைகள்தான்பிடிக்கவில்லை! தோட்டா தேசம்! பிரம்மாத ஆக் ஷன் சித்திர விருந்து! ஆனாலும் கேப்டன் டைகரின் அழுத்தமான கதை அமைப்புக்குஈடாகாது... பிரளயத்தின் பிள்ளைகள்... ஹிட்லரின் கொலைத் தொழிற்ச்சாலை பற்றி முன்புபடித்தவை மனதின் பின்னனியில் ஓடிக்கொண்டிருக்க கதை முழுவதும் இழையோடும் கனமான சோகம் நெஞ்சைத் தழுவும் துன்ப ராகம்.... ஷெர்லக் ஹோம்ஸ்! வழக்கமான லொல்லுகள்.....