திங்கள், 10 பிப்ரவரி, 2014

காவியில் ஒரு ஆவி! ஜில் ஜோர்டானின் முந்தைய சாகஸமான "அலைகடல் ஆலிங்கனம்" மர்மம் நிறைந்த ஒரு புதினமாக இருந்ததால் இக்கதையை படிக்க மிக ஆவலுடன் இருந்தேன்! ஆனால் பதின்ம வயது சிறுவர்களுக்கானஒரு எளிய கதையாகவே என்னால் இதை உணர முடிகிறது.! மேயர் பேசும்போது வார்த்தைகளை மாற்றி மாற்றி போட்டு குழப்பமாக பேசுவதும். ஜலதோஷம் பிடித்த உதவியாளர்களின் முதல் எழுத்து தடுமாற்றமும் ரசிக்க வைத்தன! 10ம் பக்கத்தில் விஷயம் வெளியே தெரிய வேண்டாம் என கேட்டுக்கொள்ளும் மேயர், 18ம் பக்கத்தில் பத்திரிகை நிருபர்களை அழைக்கட்டுமா? எனும் போதே அவரது நோக்கம் தெளிவாகி விடுகிறது! 15ம் பக்கத்தில் பிசாசு தண்ணீரில் தடுக்கி விழுவதும், 19ம் பக்கத்தில் மேயரின் உதவியாளருக்கு ஜலதோஷம் பிடிப்பதும், வெள்ளைப்பிசாசு யார்? என்பதை தெளிவு படுத்தி விடுகிறது. இதன்பின் தொடரும் கதையானது ஏகத்துக்கும் எதிர்பார்ப்புகளை கிளறிவிட்டு சுவாரஸ்யமின்றி சப்பென முடிந்து விடுகிறது! பச்சைக்கலரில் எதைக்கண்டாலும் ஸ்வாஹா பண்ணும் அந்த பசுமாடாவது ஏதேனும் முக்கியமான ஆவணங்களை விழுங்கி கதையை சுவாரஸ்யப்படுத்தும் என எதிர்பார்த்தால், அது வெறும் காமெடி பீஸு !!! ஜில்! ஏமாத்திட்டீங்க சார்!


1 கருத்து:

  1. //15ம் பக்கத்தில் பிசாசு தண்ணீரில் தடுக்கி விழுவதும், 19ம் பக்கத்தில் மேயரின் உதவியாளருக்கு ஜலதோஷம் பிடிப்பதும், வெள்ளைப்பிசாசு யார்? என்பதை தெளிவு படுத்தி விடுகிறது. இதன்பின் தொடரும் கதையானது ஏகத்துக்கும் எதிர்பார்ப்புகளை கிளறிவிட்டு சுவாரஸ்யமின்றி சப்பென முடிந்து விடுகிறது//

    அப்படியா?

    பதிலளிநீக்கு